Oo Solriya Mama Songs Lyrics | Pushpa Song lyrics

Oo Solriya Mama Songs Lyrics in Tamil

💋💋💋💋💋💋💋💋💋💋

 சேல சேல சேல கட்டுனா
குறு குறு குறுன்னு பாப்பாங்க
குட்ட குட்ட கவுன போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க

 சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ
டிரெஸ்சுல ஒன்னும் இல்லைங்க
ஆச வந்தா சுத்தி சுத்தி
அலையா அலையும் ஆம்பள புத்தி

ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

கலர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா
கலையா இருக்குன்னு சொல்வாங்க

கலரோ கருப்போ மாநிறமோ
நெறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கரை கட்டிய சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி

 ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி

 ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா

 கொழுக்க முழுக்க வளந்த பொண்ண
கும்முன்னு இருக்கு சொல்வாங்க
குச்சி ஒடம்புகாரி வந்தா
கச்சிதமுன்னு வலிவாங்க

கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாதிரி அழகச்சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி

 ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா
ஹேய் ஊம் சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா


பெரிய பெரிய மனுஷன்னின்னு
ஒரு சிலர் இங்கே வருவாங்க
ஒழுக்கமுன்னா நானேதான்னு
ஒளறி சிலரு திரிவாங்க

ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
வெளக்க அணைச்சா போதும் எல்லாம்
வெளக்குமாறும் ஒன்னுதாங்க

ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா
ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா
ஊம் சொல்வோமே பாப்பா ஊஹூம் சொல்வோமா பாப்பா
ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா


Singer: Andrea Jeremiah
Music : Devi Sri Prasad
Lyrics: Viveka



Post a Comment

Previous Post Next Post