Boom Boom song Lyrics in Tamil from Boys

boom boom song

                                                                   Movie:  Boys
Music:  A. R. Rahman
Lyrics:  Kabilan
Singers :  A. R. Rahman, Sadhana Sargam


பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான் பூம் பூம்

காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா
ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சிக்கூரை போதும் நம் காதல் வாழும்
தங்கபஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்

காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?

(பூம் பூம்...)

காதல் நுழைந்தால் காய்லாங்கடையும்
கோலார் வயலாகும்
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
புல்லாங்குழலாகும்
மரம் இழைத்த சுருள் விரிந்து
மலர்ப்படுக்கை செய்வோம்
முகம் உடந்த பாட்டிலுக்குள்
அகல்விளக்காய் வாழ்வோம்

காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?

பூம் பூம் சிக்...

காளான்குடைக்குள் கட்டி தழுவும்
அட்டை என வாழ்வோம்
நூலாம்படையில் பூச்சி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
மழை குழைத்த சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்
அழுகிவிட்ட மாம்பழத்தில்
இரு வண்டுகள் நாம் தான்

காதல் இது தான் அது தான் என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும் எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கைக்குஞ்சு தூங்கவில்லையா
ஏய் குப்பைமேட்டில் ரோஜாச்செடி பூப்பதில்லையா?
கொட்டாங்குச்சிக்கூரை போதும் நம் காதல் வாழும்
தங்கபஸ்பம் தேவையில்லை தண்ணீரே போது
 


Post a Comment

Previous Post Next Post