Mundhinam parthene song lyrics Vaaranam Aayiram

 

Mundhianm paarthene


Movie    : Vaaranam Aayiram
Music    : Harris Jayaraj
Singer   : Naresh Iyer, Prashanthini
Lyrics   : Thamarai 


முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக

நெஞ்சமும் புண்ணானதே

 

இத்தனை நாளாக

உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ

நாட்களும் வீணானதே

 

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு வந்தால் என்ன

ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன

இப்போதே என்னோடு வந்தால் என்ன

ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன

 

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே

 

துலா தொட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொண்ணை வைத்தால்

துலாபாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை

அணைக்காமல் போவேனோ ஆருயிரே

 

நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி

புகை போல படாமல் பட்டு நகர்வேனடி

வினா நூறு கானாவும் நூறு விடை சொல்லடி

 

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக உள்ளமும் புண்ணானதே

இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே

 

கடல் நீளம் மங்கும் நேரம் அலை வந்து தீண்டும் தூரம்

மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே

தலை சாய்க்க தோலும் தந்தாய் விறல் கோர்த்து பக்கம் வந்தாய்

இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

 

பகல் நேரம் காணாக்கள் கண்டேன் உறங்காமலே

உயிர் ரெண்டும் உராய கண்டேன் நெருங்காமலே

உன்னை இன்றி எனக்கு எது எதிர்காலமே

 

முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே

சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே

இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்

எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே

 

வானத்தில் நீ வெண்ணிலா

ஏக்கத்தில் நான் தேய்வதா

இப்போதே என்னோடு வந்தால் என்ன

ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன

இப்போதே என்னோடு வந்தால் என்ன

ஊர் பாக்க ஒன்றாக சென்றால் என்ன







Post a Comment

Previous Post Next Post