Vaa Vaa Penne Song Lyrics in Tamil
💕💕💕💕💕💕💕💕💕
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்
நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம் நீ
அதிகாலையில்
நான் விழித்து கொண்டேன்
காரணம் நீ
அன்பே காரணம் நீ
நிழலாய் நானே
உடன் வருவேனே
தனிமை தொலையும்
புது இனிமை இனி உருவாகும்
புவியிசை தோற்கும்
ஆசை பிறக்கும்
நம்மிசை சேர்க்கும்
என் திசைகளும் அதை ஏற்கும்
காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்
இதுவே காதல் என்றே புரியும்
ஆண் மற்றும்
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம் செய்வோம்
ஆண் மற்றும்
வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம் செல்வோம்
வா வா அன்பே
வழித்துணை நானே
நீயும் நானும்
ஓர் உயிர் தானே
வா வா அன்பே
உன் துணை நானே
நீ என் வாழ்வின்
புது வரம்தானே
Song | Vaa Vaa Penne |
Singer | Sid Sriram, Priyanka |
Lyrics | Vijay Kumar |
Music | Govind Menon |
Tags
love song