Sundari Kannal Oru Sethi Song Lyrics in Tamil
💡💡💡💡💡💡💡💡💡💡💡💡
ஆண் : சுந்தரி கண்ணால்
ஒரு சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
ஆண் :நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே சுந்தரி
கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள்
நல்ல தேதி
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
பெண் : வாய் மொழிந்த
வார்த்தை யாவும் காற்றில்
போனால் நியாயமா பாய்
விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா
ஆண் : ஆஆ வாள் பிடித்து
நின்றால் கூட நெஞ்சில்
உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால்
கூட ஜீவன் உன்னை
சேர்ந்திடும்
பெண் : தேனிலவு நான்
வாழ ஏன் இந்த
சோதனை
ஆண் : வான் நிலவை
நீ கேளு கூறும் என்
வேதனை
பெண் : என்னைத்தான்
அன்பே மறந்தாயோ
ஆண் : மறப்பேன் என்றே
நினைத்தாயோ
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
பெண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
பெண் : சோலையிலும்
முட்கள் தோன்றும் நானும்
நீயும் நீங்கினால் பாலையிலும்
பூக்கள் பூக்கும் நான் உன்
மார்பில் தூங்கினால்
ஆண் : ஆஆ மாதங்களும்
வாரம் ஆகும் நானும் நீயும்
கூடினால் வாரங்களும்
மாதம் ஆகும் பாதை மாறி
ஓடினால்
பெண் : கோடி சுகம்
வாராதோ நீ எனை
தீண்டினால்
ஆண் : காயங்களும்
ஆறாதோ நீ எதிர்
தோன்றினால்
பெண் : உடனே
வந்தால் உயிர்
வாழும்
ஆண் : வருவேன்
அந்நாள் வரக் கூடும்
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
ஆண் : நான் உனை
நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க
மாட்டேன் சேர்ந்ததே
நம் ஜீவனே
ஆண் : சுந்தரி
கண்ணால் ஒரு
சேதி சொல்லடி
இந்நாள் நல்ல தேதி
பெண் : என்னையே
தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன்
அதற்காக
Song | Sundari Kannal Oru Sethi |
Singer | S.P. Bala Subrahmaniyam and S. Janaki |
Lyrics | Vaali |
Music | Ilayaraja |
Tags
ilayaraja