Tharangini Song Lyrics In Tamil
💖💖💖💖💖💖💖💖💖
தரங்கினி தரங்கினி தனிமையில் விடாதவள் இவள்
கனவிலும் நினைவிலும் இடைவெளி தராதவள் இவளே
இனிமையின் இன்னோர் துகளே
முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்
அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும்
அடிமனதில் மருகி மருகி
கலங்கரை விளக்காய் வந்தாள்
காரிருளில் தூணாய் நின்றாள்
மயிலிறகு பார்வை கொண்டாள்
மாமழையும் தானே தந்தாள்
தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி
தினம் தினம் உன்னை திருடி செல்ல
விழித்திருந்தேன் விடியல் வரை
கனவுகள் என்னும் வலை விரித்தேன்
அதுவல்லவோ விமல சிறை
கடிகாரம் வீணாய் எதற்கு நமக்கு
உயிரில் விரலால் நீ கீற
புரளும் நதியாய் நான் மீற
போ என்று நானே சொன்னாலும் போகாதே நீ
தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி
முதல் முதல் உணரும் அன்பால்
மூழ்கிவிட தோன்றும் பெண்பால்
அழகி என் அருகில் வந்தாள்
ஆறறிவும் தேயும் தன்னால்
புதையலே பூமியை கீறி
தேடி வரும் முன்னால்
அனல்மேலே பனியாய் உருகி உருகி
கரையும்
எனது மனம் உருகி உருகி
இருந்தாலும் இதுவே மருகி மருகி
தொடரும்
அடிமனதில் மருகி மருகி
தரங்கினி தரங்கினி கிணிணி கினினி கினி
தரங்கினி தரண தரங்கினி
Song | Tharangini Tharangini |
Singer | Sarthak Kalyani |
Lyrics | Thamarai |
Music | AR Rahman |