🍁🍁 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லை
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து
போவதில்லையே
நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே இது எதுவோ.ஓ.
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே.ஓ.ஓ.
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா
ஓஒ ஓ ஓ ஓ
ஓஒ ஓ ஓ ஓ.
வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே
நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேர் இன்றி விதை இன்றி
விண்தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே ஏ ஏ
ஆஆஅ ஆஆஅ ஆ..
எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே
என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே
யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு
ஒரு சொந்தம் உறவானதேன்
ஏனென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம்
முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ.
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா (2)
பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே பார்த்ததாரும் இல்லை
புலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்று வரை நேரம்
போகவில்லையே
உனதருகே நேரம்
போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
என்ன புதுமை
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ.
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா தோம் தனனா
தானா ந தனனா (2)
ஓஒ ஓ ஓ ஓ
ஓஒ ஓ ஓ ஓ.
Song | Pookal Pookum Tharunam |
Singer's | Roop Kumar Rathod, Harini, Andrea Jeremiah |
Lyrics | Na Muthu Kumar |
Music | GV Prakash |